Home   »   Topper’s Strategy To Crack TNPSC 2020...

Topper’s Strategy To Crack TNPSC 2020 Exam

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

Tamil Nadu Public Service Commission- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) கீழ் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-ஐஐ (நேர்முகத் தேர்வு பதவிகள் (குரூப்-2) (Group-2 Interview Post) மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள் (குரூப்-2 ஏ) (Group-2A Non – Interview Post)).

Toppers Strategy

தமிழக அரசுத் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்விற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடப்பட உள்ளது. குரூப்-2 தேர்வானது மூன்று நிலையை உள்ளடக்கியது.

Also read,

முதல் நிலை, இரண்டாம் நிலை எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு. ஆனால், குரூப்-2 ஏ தேர்வானது முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை மட்டுமே உள்ளடக்கியது. இவ்விரண்டுத் தேர்வுக்கும் உள்ள ஒரே வேறுபாடு நேர்முகத்தேர்வு மட்டுமே, ஏனைய பாடத்திட்டங்கள் அனைத்தும் ஒன்றே.

இத்தேர்விற்காக விண்ணப்பிக்கும் தேர்வாளர்கள் எண்ணிக்கையும் அவர்களிடையே நிலவும் போட்டியும் வருடத்திற்கு வருடம் அதிகமாகிக்கொண்டே வருகிறது.

Also read,

பல லட்சம் தேர்வாளர்கள் எழுதும் இத்தேர்வில் ஒரு சிலரால் மட்டுமே தங்கள் இலக்கை அடைந்து வெற்றி பெறமுடிகிறது.  அதற்கு முழுமுதற் காரணம் அவர்கள் பின்பற்றும் வழிமுறையாகும்.

முதலில் தேர்வின் வழிமுறைகளை தெரிந்து கொள்வோம்.

  1. முதல் நிலை (Preliminary examination),
  2. இரண்டாம் நிலை எழுத்துத்தேர்வு (Main Written examination),
  3. நேர்முகத்தேர்வு (Interview)

என மூன்று பிரிவினை கொண்டது.

முதல்நிலைத் தேர்வில் அப்ஜெக்டிவ் டைப் கொஸ்டின்ஸ் (objective type questions) இருக்கும். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் நிலை எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

இரண்டாம்நிலை தேர்வானது எழுத்து வடிவில் இருக்கும். இதில் தேர்ச்சி பெற்றவர்களே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். இரண்டாவது, தமிழக அரசு தேர்வாணையத்தால்  வெளியிடப்படும் தேர்வு அறிக்கையில் தேர்விற்காக ஒதுக்கப்படும் பதவிகளும் அதன் துறைகளும் கொடுக்கப்பட்டிருக்கும். தேர்வை எழுதும் நாம் எந்தெந்த பதவிகள் எந்தெந்த துறையைச் சார்ந்தவை என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். இது சில சமயத்தில் நமக்கு தூண்டுதலாகவும் அமையும்.

மூன்றாவது, தேர்வின் பாடத்திட்டங்களை விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

நான்காவது, கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாத்தாள் மாதிரிகளை சேகரித்து அதில் அதிகமாக கேட்கப்பட்ட பாடத் திட்டங்களுக்கு முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

ஐந்தாவது: முறையான பயிற்சி, சிறப்பான தொடக்கம் பாதி வெற்றி தரும் என்பது பழமொழி. முதலில் தேர்வுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களை தேர்வு நடக்கும் நாளில் இருந்து 30 நாட்களுக்கு முன்னர் அனைத்து பாடத் திட்டங்களையும் முடித்துவிடும் படி அட்டவணையைத் தயார் செய்ய வேண்டும். அவ்வாறு இருப்பின் தேர்வுக்கு முன்னர் இருக்கும் 30 நாட்களை மீண்டும் ரிவிஷனக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பாடத்திட்டத்தை உறுதியாக முடித்துவிடவேண்டும். எடுத்துக்காட்டாக இன்று  முடிக்கப்பட வேண்டிய குறிப்பிட்ட பாடத்திட்டத்தை ஏதோ ஒரு சில காரணங்களால் உங்களால் முடிக்க முடியவில்லை. உங்கள் மனது நாளை முடித்துக் கொள்ளலாம் என்று சொல்கிறது. அடுத்த நாளும் இதே மாதிரி உங்கள் மனது நாளை முடித்துக் கொள்ளலாம் நாளை முடித்துக் கொள்ளலாம் என்று சமாதானம் செய்கிறது. இதே மாதிரி தொடர்ந்து நடக்கையில் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு சிறு துளி பெரு வெள்ளம் போல் மிகப்பெரிய அளவில் பாடத்திட்டத்தை உங்களால் முடிக்க முடியாமல் போகலாம். ஆகவே ஒவ்வொரு நாளும் எந்த ஒரு காரணத்திற்காகவும் உங்களை நீங்கள் சமாதானம் செய்து கொள்ளாதீர்கள்.

ஒவ்வொரு நாளும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பாடத்திட்டத்தை அன்றே முடியுங்கள். அதன் பிறகு அன்று தூங்க செல்வதற்கு முன் படுக்கையில் அரை மணி நேரம் இன்று என்ன செய்தோம் என்பதை ஞாபகப் படுத்திப் பாருங்கள். படிக்கும் பொழுது எந்த ஒரு விஷயம் உங்களுக்கு மறக்கும்படி அமைகிறதோ அதை ஒரு நோட்டில் எழுதி வைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப அதை ரிவிஷன் செய்யுங்கள். அவ்வாறு செய்கையில் அது உங்களுக்கு எப்போதும் மறக்காது. இவ்வாறு தினமும் செய்து வர உங்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்.

தேர்வுக்கு முன்னர் முன் மாதிரி தேர்வுகளை அதிகம் எழுதிப் பாருங்கள். அவ்வாறு எழுதுவதன் மூலம் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய பலவீனமான பகுதிகளை புரிந்துகொள்ள அத்தேர்வு தூணாய் அமையும்.

அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தலைப்புகளுக்கு ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள புத்தகங்களும், இந்தியாவின் புவியியல், பொருளாதாரம், வரலாறு மற்றும் பண்பாடு, ஆட்சியியல், தேசியஇயக்கம், ஆகிய தலைப்புகளுக்கு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு சமச்சீர் புத்தகங்களும் பரிந்துரைக்கப்படுகிறது.

திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (APTITUDE AND MENTAL ABILITY) ஆர் எஸ் அகர்வால் புத்தகம் பரிந்துரைக்கப்படுகிறது. இதுதவிர திருக்குறள், தமிழ்நாட்டின் வரலாறு மரபு பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள் ஆகிய தலைப்புகளும் மற்றும் தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் ஆகிய தலைப்புகளும் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

(குரூப்-2) (குரூப்-2 ஏ) 

ஆன்லைன் நேரடி வகுப்பில் சேர, இங்கே கிளிக் செய்க

To Join GROUP 2 & 2A  Online Live class, Click Here

குரூப்-4  ஆன்லைன் நேரடி வகுப்பில் சேர, இங்கே கிளிக் செய்க

To Join GROUP 4  Online Live class, Click Here

SSC CGL ஆன்லைன் நேரடி வகுப்பில் சேர, இங்கே கிளிக் செய்க

To Join SSC CGL Batch  Online Live class, Click Here

மகிழ்ச்சியான பழக்கவழக்கங்கான உடற்பயிற்சி தியானம் விளையாட்டு நண்பர்களுடன் வெளியில் செல்வது மற்றும் இசை கேட்பது ஆகிய பழக்கவழக்கங்கள் நமக்கு மகிழ்ச்சியை மற்றும் ஆரோக்கியத்தை கொடுக்கும். எதிர்மறை எண்ணங்கள் உடைய நபர்களிடம் இருந்து சற்று தள்ளி இருங்கள். ஏனென்றால் அவர்கள் எப்பொழுதும் நம்முடைய முயற்சியை தளர்வு செய்ய நினைப்பர். உங்கள் நலன் விரும்பும் நபர்களிடம் மட்டும் அதிகம் பழக்கம் வைத்துக் கொள்ளுங்கள் அது ஒரு உந்துகோலாக நமக்கு அமையும். உங்கள் என்னத்தை சிதற அடிக்கக்கூடிய விஷயங்களில் இருந்து சற்றுக் கவனமாக இருங்கள்.

மேலே குறிப்பிட்டுள்ளதைக் கடைப்பிடித்து உங்களது பயிற்சியை சிறப்பாக தொடங்குங்கள்.

Best Wishes from ADDA247 !! Register Here to Share Your Feedback

Test Prime For All Exams 2024

TOPICS: